குடிநீர் குழாய்களை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம்: சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் குடிநீர் குழாய்களை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை விபத்து ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் குழாய்களை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம்: சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்-வாலாஜாபாத் 6 வழி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக, சென்னை, காஞ்சீபும், வேலூர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினந்தோறும் ஏராளமான அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகிறன.

இந்த நிலையில் 6 வழிச்சாலையின் கீழே செல்லும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி சேதமடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட குடிநீர் அதிகாரிகள் நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு இடங்களில் பள்ளம் தோண்டி குழாயை சீர் செய்தனர்.

ஆனால் அதன் பின்னர், சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சரியான முறையில் சீரமைக்காமல் சென்றதாக தெரிகிறது.

இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பஸ்கள், சிரமமடைந்து செல்கின்றன. மேலும் அப்பகுதியில் எச்சரிக்கை பலகைகள் எதுவும் இல்லாததால், பகல், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அனைவரும் வரும்போது திடீரென பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் உயிருக்கு பயந்து வாகனத்தை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com