அரவக்குறிச்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை வாக்குறுதி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது.
அரவக்குறிச்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை வாக்குறுதி
Published on

அரவக்குறிச்சி,

நீங்கள் தாமரைக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் இரட்டை இலைக்குப் போடும் வாக்கு ஆகும். நீங்கள் போடும் வாக்கு அரவக்குறிச்சி தொகுதியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வாக்குகள் ஆகும். அரவக்குறிச்சி தொகுதியில் மாணவ-மாணவிகளின் நலன்கருதி அரசு கலைக்

கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன். நான் அப்பளுக்கற்ற, எதற்கும் பயப்படாதவனாக, நேர்மையான, மக்கள் சேவகனாக இருப்பேன் என உறுதி கூறுகிறேன். என்னை நீங்கள் சட்டமன்றத்திற்கு அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. பிரமுகர் வி.வி.செந்தில்நாதன், அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கோ.கலையரசன், ஈஸ்வரமூர்த்தி, எம்.ஜி.ஆர். மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com