திருவள்ளூர் மாவட்டம், கலெக்டரிடம் புகார் மனு

திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மண்டல சங்கங்களை உள்ளடக்கி இயங்கி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கலெக்டரிடம் புகார் மனு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் திருவள்ளூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில், முன்னாள் மாநில தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் குருமூர்த்தி, மகேந்திரன் உள்பட சங்க நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். இதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மண்டல சங்கங்களை உள்ளடக்கி இயங்கி வருகிறது. சங்கத்தின் வளர்ச்சிக்காக கடந்த 20 ஆண்டுகளாக செலுத்திய ரூ.2 கோடியை முன்னாள் நிர்வாகிகள் கையாடல் செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகளை பொறுப்பில் இருந்து நீக்கி கணக்கு மற்றும் பணத்தை ஒப்படைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை அவர்கள் கணக்கு மற்றும் பணத்தை ஒப்படைக்காமல் சங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து சங்க பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் இது சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com