

சென்னை,
சென்னை போலீசில் நேற்றுமுன்தினம் வரை 1,434 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 11 பேர் கொரோனா பிடியில் சிக்கினர்.
இதையடுத்து கொரோனா பாதிப்பு 1,445 ஆக உயர்ந்தது. கொரோனா தாக்குதல் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் போலீசார் குணம் அடைந்து வருகிறார்கள். அதன்படி 36 பேர் நேற்று குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். கடந்த 4 நாட்களில் மட்டும் கொரோனாவை வென்று உதவி கமிஷனர்கள் ஹரிகுமார், சீதாராமன் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 72 பேர் பணிக்கு திரும்பி உள்ளனர். பணிக்கு திரும்பிய இவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் நிகழ்ச்சி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை போலீஸ்துறையில் இதுவரையில் 849 போலீசார் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.