பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபர்களுக்கு அடி-உதை

பூந்தமல்லி பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபர்களை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர்.
பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபர்களுக்கு அடி-உதை
Published on

பூந்தமல்லி,

தூத்துக்குடியை சேர்ந்தவர் கற்பகம் (வயது 53). சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்த இவர், சொந்த ஊருக்கு திரும்பி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையம் அருகே நூறடி சாலையில் உள்ள நடைபாதையில் அமர்ந்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், கற்பத்தை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துவிட்டு ஓடினர். கற்பகம் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் 2 பேரையும் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் இருவரையும் கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள், அரும்பாக்கத்தை சேர்ந்த ஆஷிக்அலி அகமது (21), கணேசன் என்ற கோட்டை (42) என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com