

செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலையை சேர்ந்தவர் கந்தன் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர், மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் உள்ள அரசு பள்ளி எதிரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணகி போக்சோ சட்டத்தின் கீழ் கந்தனை கைது செய்தார்.
இதேபோல் அமைந்தகரையை சேர்ந்தவர் முத்து (30). கட்டிடத்தொழிலாளியான இவர், 17 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். மேலும் இதை வலியுறுத்தி சிறுமியின் வீடு புகுந்து அவரது பெற்றோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் முத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.