இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள்: நெய்வேலியில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாளையொட்டி இன்று நெய்வேலியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று மத்திய மாவட்ட ஏ.பி.ஆர். பக்தரட்சகன் தெரிவித்துள்ளார்.
இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள்: நெய்வேலியில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்
Published on

கடலூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கடலூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று கடலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.ஆர். பக்த ரட்சகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

3 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

நெய்வேலி நகரில் உள்ள வேலுடையான் பட்டு சிவசுப்பிரமணியசாமி கோவிலில் காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் நெய்வேலி நகரத்தில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படும். அதை தொடர்ந்து, நெய்வேலி நகரத்துக்கு உட்பட்ட 21 மற்றும் 28-வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. பின்னர் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு எதிரே வைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டும். இதேபோல் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com