தாம்பரத்தில் நாளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறை தீர்க்கும் முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், சந்தாதாரர்கள், தொழிலாளர்களின் நீண்டகால குறைகள், கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி “நிதி ஆப் கே நிகத்” (உங்கள் அருகே வருங்கால வைப்பு நிதி) என்ற பெயரில் குறைதீர்க்கும் முகாமை நடத்தி வருகிறது.
தாம்பரத்தில் நாளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறை தீர்க்கும் முகாம்
Published on

அந்தவகையில், தாம்பரம் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் நாளை(வெள்ளிக்கிழமை) இணையதள முறையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. சந்தாதாரர்கள், தொழிலாளர்கள் தங்களுடைய புகார்கள், கோரிக்கைகளை tam-grievances@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்யலாம். உறுப்பினர்கள், 10-ந்தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இணையதள முறையில் பங்கேற்கலாம்.

இதேபோல தாம்பரம் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஓய்வூதியதாரர்களுக்கும் நாளை இணையதள முறையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய கோரிக்கைகள், குறைகள் தொடர்பாக இ-மெயில் முகவரியில் பதிவு செய்யலாம். ஓய்வூதியதாரர்களுக்கு மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 ஹிமான்சு குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com