நாளை காதலர் தினம்: கன்னியாகுமரிக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடு அத்துமீறினால் வழக்குப்பதிவு

காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் அத்துமீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை காதலர் தினம்: கன்னியாகுமரிக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடு அத்துமீறினால் வழக்குப்பதிவு
Published on

கன்னியாகுமரி,

காதலர் தினம் நாளை (புதன்கிழமை) வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை, பூங்காக்களில் காதல் ஜோடிகள் திரள்வார்கள். காதலர் தினத்தன்று காதலர்கள் பொது இடங்களில் சந்திக்கும் போது, அவர்கள் அத்துமீறி நடக்க கூடாது என்பதற்காக காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த ஆண்டு காதலர் தினத்தன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும், பொது இடங்களில் காதல் ஜோடிகள் அத்துமீறாமல் இருக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் கூறியதாவது:

கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குத்துறை, வட்டக்கோட்டை கடற்கரை போன்ற பகுதிகளில் காதலர் தினத்தன்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சாதாரண உடையில் போலீசார் 4 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பார்கள்.

வழக்கமாக கடற்கரை பகுதி, பொது இடங்களில் அத்துமீறும் காதல் ஜோடிகள் எச்சரித்து அனுப்பப்படுவார்கள். இந்த ஆண்டு அத்துமீறும் காதல் ஜோடிகள் மீது பொது இடங்களில் அத்துமீறியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்படும்.

18 வயதுக்கு உள்பட்டவர்களுடன் அத்துமீறி பிடி பட்டால் குழந்தைகள் பாலியல் சட்டத்தின் கீழ் (போஸ்கோ) வழக்குப்பதிவு செய்யப்படும். இதுபோல், மோட்டார் சைக்கிளில் ஜோடியாக சென்று அத்துமீறும் ஜோடிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com