முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
Published on

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவு தடுத்து நிறுத்துகிறது.

இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவேரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் தொடங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி வரை இந்த காடுகள் பரவி உள்ளது.

இந்த காட்டின் அழகை கண்டு ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

கொரோனா

இந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இதன் எதிரொலியாக தமிழக அரசு மீண்டும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது என மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறியுள்ளார்

தடை

இதுகுறித்து முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் தாகீர் அலி கூறியதாவது:-

அலையாத்திகாட்டை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் இந்த நோயிலிருந்து பாதுக்காக்கும் வகையில் அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் வந்து ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com