ஈரோட்டில் 6 இடங்களில் ரூ.53 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்குகள்

ஈரோட்டில் 6 இடங்களில் ரூ.53 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்குகள்.
ஈரோட்டில் 6 இடங்களில் ரூ.53 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்குகள்
Published on

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கருங்கல்பாளையம் காவிரிக்கரை ஆற்றுப்பாலம், காவிரிரோடு, சின்னமாரியம்மன் கோவில், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சம்பத்நகர், ரெயில் நிலையம் ஈ.வி.என்.ரோடு ஆகிய 6 இடங்களில் ரூ.53 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பொத்தானை அழுத்தி உயர்கோபுர மின்விளக்குகளை ஒளிரவிட்டனர்.

இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் முருகுசேகர், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் தெய்வநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com