

திருவண்ணாமலை,
கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக மோட்டூர் கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான 40 செண்ட் நிலத்தை விற்க இன்னும் 2 நாட்களில் பத்திரப்பதிவு செய்ய இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் சக்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கேபிள் வயரால் தூக்கில் தொங்கினார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த அவரது மனைவி அற்புதா இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சக்தியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்தபோது ஏற்கனவே சக்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.