தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை எல்லீஸ்நகர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
Published on

மதுரை,

தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை உடனே நிறுத்த வேண்டும், தனியார்மயப்படுத்தும் மின்சார சட்டம்-2020ஐ கைவிட வேண்டும், அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும், மளிகை பொருட்களும் தடையின்றி விரைவாக கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும், பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மதுரை எல்லீஸ்நகர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் தெய்வராஜ், ஐ.என்.டியூ.சி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பாதர்வெள்ளை, கருணாநிதி, மகபூப்ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com