பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடினர்

புதுவையில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடினர்.
பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடினர்
Published on

புதுச்சேரி,

நாகரிக உலகில் டி.வி., செல்போன்களில் மக்கள் மூழ்கி கிடக்கின்றனர். புதுப்புது கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பாரம்பரிய விளையாட்டுகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து இருக்கவே முடியாது என்ற நிலை இருந்து வருகிறது.

இந்த விளையாட்டுகளை சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் தெருவில் (மிஷன் வீதி, காந்திவீதிக்கு இடைப்பட்ட பகுதி) பாரம்பரிய விளையாட்டு திருவிழா நேற்று நடத்தப்பட்டது. இதற்காக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

புதிய அனுபவம்

அங்கு வண்ண துணிகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாட்டு வண்டிகள் கொண்டு வரப்பட்டு அலங்கரித்து வைத்து இருந்தனர். இதில் சிறுவர்-சிறுமியர்கள் ஏறி விளையாடி மகிழ்ந்தனர். இதே போல் ஊஞ்சல், பல்லாங்குழி, பம்பரம், கோலிக்குண்டு, தண்ணீர் பந்து, உப்புமூட்டை சுமத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த விளையாட்டுகள் குறித்து முதலில் சிறுவர்-சிறுமியர்களுக்கு விளக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அதன்படி விளையாடி மகிழ்ந்தனர். தற்போதைய வாழ்க்கை முறையில் இருந்து விலகி பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியது அவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com