தென்னை நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி திருப்பதிசாரத்தில் நடந்தது

தென்னை நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
தென்னை நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி திருப்பதிசாரத்தில் நடந்தது
Published on

நாகர்கோவில்,

தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி திருப்பதிசாரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்தது. பயிற்சியில், பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் கவிதா பேசினார். அப்போது குமரி மாவட்டத்தில் தென்னையில் காணப்படும் முக்கிய பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, கருந்தலைப்புழு மற்றும் ஈரியோபிட் சிலந்தி ஆகிய பூச்சிகளின் பாதிப்பு அறிகுறிகள், ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் பற்றி விளக்கினார்.

மேலும் தென்னையை தாக்கும் மிக முக்கிய நோய்களான தென்னை குருத்தழுகல், தஞ்சாவூர் வாடல் நோய், வேர்வாடல், இலை அழுகல், ஆகியவற்றின் அறிகுறிகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் உயிரியல் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறகள் குறித்து விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது.

உறுதிமொழி

இந்த பயிற்சியில் குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டாரத்தை சர்ந்த 34 விவசாயிகள் கலந்துகாண்டனர். அவர்களுக்கு தோட்டங்களில் உள்ள களப்பிரச்சினைக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதோடு தூய்மைக்கான பிரசாரத்தையொட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதமதி தலைமையில் விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் தூய்மைக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் பண்ணை கழிவுகளை உரமாக்குதல் குறித்து விளக்கப்பட்டது. முடிவில் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com