

பழனி:
பழனி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த செயல்விளக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. இதற்கு பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பயிற்சியில், மழை, வெள்ளம், புயல், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது மற்றும் பேரிடர் காலத்தில் பின்பற்ற வேண்டிய முறைகள் என்பது குறித்த செயல்விளக்க முறைகள் எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றார்.