நெல்லை மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் இடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் இடமாற்றம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி தாசில்தார் வெற்றிசெல்வி, நதிநீர் இணைப்பு திட்டம் அம்பை அலகு-1 தாசில்தாராகவும், நதிநீர் இணைப்பு திட்டம் அம்பை அலகு-1 தாசில்தார் மோகனா, நதிநீர் இணைப்பு திட்டம் பாளையங்கோட்டை அலகு-3 தாசில்தாராகவும், நாங்குநேரி தாசில்தார் நல்லையா, நதிநீர் இணைப்பு திட்டம் நாங்குநேரி அலகு-5 தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்ட தாசில்தார் முகமது புகாரி, சேரன்மாதேவி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், ஆதிதிராவிடர் நல அலுவலக தனிதாசில்தார் (கல்வி உதவித்தொகை) சங்கர், அகதிகள் மறுவாழ்வு தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன், பதவி உயர்வு பெற்று சேரன்மாதேவி தாசில்தாராகவும், ராதாபுரம் தலைமையிடத்து துணை தாசில்தார் இசக்கிப்பாண்டி, பதவி உயர்வு பெற்று நாங்குநேரி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கலெக்டர் விஷ்ணு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com