போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஊட்டி,

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல தலைமையகங்களிலும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முதல்கட்டமாக வேலைநிறுத்த வி ளக்க ஆர்ப்பாட்ட வாயிற்கூட் டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி, நீலகிரி மண்டலத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. (தி.மு.க.) நீலகிரி மண்டல செயலாளர் நெடுஞ் செழியன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை பொதுச்செயலாளர் செய்யது இப்ராகிம், சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் பரமசிவம் ஆகியோர் மு ன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுனர்களின் பணிச்சுமையை அதிகரிக்கக்கூடாது,ஓய்வூதியபலன்களை வழங்கு வதோடு, ஓய்வூதியத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண் டனர்.

இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாநில து ணை பொதுச்செயலாளர் செய்யது இப்ராகிம் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் மலைப்படி வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஈடுபடுவதை கண்டிக்கிறோம். இதனை அதிகாரிகள் கைவிட வேண்டும். தொழிலாளர்கள் தங்களது சம்பள உயர்வை பதிவு செய்யும் போது, இனிமேல் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கட்டாயப்படுத்தி எழுதி வாங்கக்கூடாது.

போக்குவரத்து தொழிலாளர்கள் தற்போது ஷிப்ட் முறையில் பணிபுரிவதை மாற்றி, வாரத்தில் 5 நாட்கள் பணிபுரிய வேண்டும் என்று அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடாது. நிரந்தரம் ஆகாமல் பட்டியல் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி எண் வழங்க வேண்டும். சம்பள நி லுவைத்தொகை மற்றும் ஓய்வு பெற்றவர்களின் நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.

புதிதாக பஸ்களை இயக்குவதாக கூறி, கண்டக்டர் இல்லாமல் புதிய பஸ்களை இயக்கக்கூடாது. மேலும் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதுடன் தனியாருக்கு பஸ்களை தாரை வார்க்கக்கூடாது. வருகிற 27-ந் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வேலைநிறுத்த போராட்டம் சம்பந்தமான அறிவிப்பு வெளியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com