தாராபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தாராபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தாராபுரம்,

தாராபுரத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப் திருப்பூர் மண்டல பொதுச் செயலாளர் கே.கே.துரைசாமி தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் நல்லசேனாபதி, செல்லமுத்து, நாட்டுத்துரை, சுந்தரராஜன், ராமசாமி, பொன்னுசாமி மற்றும் செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது 14-வது ஊதிய ஒப்பந்தத்தை, தமிழக அரசு தொழிற் சங்கங்களோடு பேசி முடிக்க வேண்டும். வாகனத்திற்கு தொழிலாளர்களை நியமிப்பதில், ஆளும் கட்சி சங்கத்திற்கு அதிகாரிகள் துணை போகக் கூடாது. தொழிலாளர்களின் விடுப்பை மறுத்து, வேலைக்கு வரவில்லை என்று கூறி, சம்பளத்தை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். பணிமனையில் வேலை செய்யும் ஊழியர்களை வதைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். விபத்தை காரணம் காட்டி இடமாறுதல் செய்யக்கூடாது. தொழிலாளர்களிடம் வசூல் தொகையை கட்டாயப்படுத்தக்கூடாது. கிலோ மீட்டரையும், எரிபொருளையும் கணக்கிட்டு தொழிலாளர்களை சித்ரவதை செய்வதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com