பள்ளி வாகனங்கள் தரம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதால் தற்போது 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
பள்ளி வாகனங்கள் தரம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் சோதனை
Published on

இந்த நிலையில் பள்ளிகளில் உள்ள வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மத்திய சென்னை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த வாகனங்களை தென் சென்னை ஆர்.டி.ஓ. யோகஜோதி, மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் கவுதமன், மத்திய சென்னை மாவட்ட கல்வி அதிகாரி சண்முகவேல், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மோகன், பழனிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர். பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொறுத்தப்பட்டுள்ளதா? முதலுதவி பெட்டிகள் உள்ளதா? தீயணைப்பான்கள் செயல்படுகின்றனவா? முறையாக வாகனங்கள் பராமரிக்கப்பட்டு உள்ளனவா? என்பதை ஆய்வு செய்தனர். பின்னர் பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீயணைப்பு குறித்து பயிற்சியும் அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com