12 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை

காந்திக்கிராமம் சித்த மருத்துவ மையத்தில் 12 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
12 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் தீவிரமாக கொரோனா தொற்று பரவி வருகிறது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க உத்தரவிட்டது.

அதன்படி திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

இதில் கொரோனா நோயாளிகள் 12 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ரபீக் அகமதுவிடம் கேட்டபோது, கொரோனா நோயாளிகளுக்கு சளி, இருமல், காய்ச்சலுக்கான சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இது தவிர நீராவி பிடித்தல், நுரையீரலின் ஆரோக்கியத்தை பேணிக் காத்திட லிங்கமுத்திரை உள்பட பல்வேறு முத்திரைகள் கற்றுத்தரப்படுகிறது.

மேலும் அக்குபஞ்சர் முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சித்த மருந்துகளில் பக்க விளைவுகள் ஏதுமில்லை.

அதனால் பொதுமக்கள் அச்சமின்றி இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com