பழங்குடியின மாணவர்கள் 5 பேருக்கு தலா ரூ.25 லட்சம், போலீஸ் பணி

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த பழங்குடியின மாணவர்கள் 5 பேருக்கு தலா ரூ.25 லட்சம், போலீஸ் பணி வழங்கப்படும் என மந்திரி சுதிர் முங்கண்டிவார் அறிவித்தார்.
பழங்குடியின மாணவர்கள் 5 பேருக்கு தலா ரூ.25 லட்சம், போலீஸ் பணி
Published on

மும்பை,

மராட்டியத்தில் பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை சார்பில் மிஷன் சவுரியா 2018 எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலம் முழுவதும் உள்ள பழங்குடியினர் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அரசு சார்பில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை உச்சியை நோக்கி சாதனை பயணம் மேற்கொண்டனர்.

இதில் சந்திராபூர் மாவட்டத்தில் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உமாகாந்த் மடாவி, பர்மேஷ் ஆலே, மனிஷா துருவே, கவிதாஸ் காத்மோடே, விகாஸ் சோயம் ஆகிய 5 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தனர். மற்ற 5 மாணவர்கள் பாதிக்கும் மேற்பட்ட உயரத்தை கடந்த பிறகு பின்வாங்கினர்.

இதையடுத்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பழங்குடியின மாணவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. சமீபத்தில் மான் கி பாத்(மனதின் குரல்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாணவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.

இந்தநிலையில் மராட்டிய நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவார், எவரெஸ்ட் உச்சியை அடைந்து சாதனை படைத்த மாணவர்கள் 5 பேருக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் மற்றும் போலீஸ் பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் தோல்வியடைந்த மற்ற 5 மாணவர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் அளிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com