வாணியம்பாடியில் அமைச்சர் துரைக்கண்ணு உருவபடத்துக்கு அஞ்சலி

வாணியம்பாடியில் அமைச்சர் துரைக்கண்ணு உருவபடத்துக்கு அஞ்சலி.
வாணியம்பாடியில் அமைச்சர் துரைக்கண்ணு உருவபடத்துக்கு அஞ்சலி
Published on

வாணியம்பாடி,

வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவ படத்திற்கு, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நகர செயலாளர் சதாசிவம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாநில அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் முனிசாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஆர்.வி.குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், நகர பொருளாளர் தன்ராஜ், பேரூராட்சி செயலாளர்கள் சரவணன், பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.பி.ஜெய்சக்தி, காதர்பேட்டை கோவிந்தன் உள்பட பலர் துரைகண்ணு படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com