குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் பார்வையாளர் மாடம் மூடல்

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் பார்வையாளர் மாடம் மூடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் பார்வையாளர் மாடம் மூடல்
Published on

செம்பட்டு,

குடியரசு தினவிழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் சதிதிட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருச்சி விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விமானநிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இயங்கி வந்த பார்வையாளர் மாடம் குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு கருதி நேற்று முதல் மூடப்பட்டது.

வருகிற 30-ந் தேதி வரை பார்வையாளர் மாடம் திறக்கப்படாது என்றும், 31-ந் தேதி முதல் வழக்கம்போல் பார்வையாளர் மாடம் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

இதற்கிடையே மங்களூருவில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக திருச்சி விமானநிலையத்திலும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் மற்றும் மாநகர போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட் டன. விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானநிலையத்துக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. விமான நிலைய வெளிப்புற பகுதி மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com