

தூத்துக்குடி,
தூத்துக்குடிமதுரை நாற்கரசாலையில் வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறையின் விதிமுறைகள், சாலையை அமைத்த தனியார் நிறுவனத்தால் மீறப்பட்டு உள்ளன. இந்த சாலையில் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பாலம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒரே பாலத்தில் இருபுறமும் இருந்து வாகனங்கள் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அனைத்து பணியும் முடிக்கப்பட்டதாக கூறி புதூர்பாண்டியாபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த ரோட்டில் பல இடங்களில் பழுது ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
சாலை கனரக வாகனங்களின் பாரத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனை சரிசெய்ய முன்வராத தனியார் நிறுவனம் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறது. ஆகையால் தூத்துக்குடிமதுரை நாற்கரசாலையில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும். மீளவிட்டான் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.