டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் 250 பக்க விசாரணை அறிக்கையை போலீஸ் உதவி கமிஷனரிடம் ஆர்.டி.ஓ. சமர்ப்பித்தார்

டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஓட்டல் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
டி.வி. நடிகை சித்ரா
டி.வி. நடிகை சித்ரா
Published on

விசாரணைக்கு பின்னர், கடந்த 14-ந்தேதி ஹேம்நாத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் சித்ரா தற்கொலை குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை செய்து வந்தார்.அவர் சித்ராவின் தாய், தந்தை, சகோதரி, சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்ட விடுதியின் ஊழியர்கள், அவருடன் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட சக நடிகர்கள் மற்றும் சித்ராவிற்கு நெருக்கமானவர்கள் என சுமார் 16 பேரிடம் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்.

4 கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை தயார் செய்து பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் சுதர்சனத்திடம், ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ நேற்று இரவு அனுப்பிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com