குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சிறுவர்கள் 2 பேர் கைது

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சிறுவர்கள் 2 பேர் கைது
Published on

குத்தாலம்,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் கோவில் உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின் வெளிநடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் உட்புறம் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டன. நள்ளிரவு 12.30 மணியளவில் கோவிலில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த இரவு காவலாளி சுந்தர் அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்த பணியாளர்களை அழைத்துக்கொண்டு கோவிலின் உள்ளே சென்று பார்த்தார்.

கைது

அப்போது அங்கு கோவில் உண்டியலை உடைத்து சில்லறை காசுகளை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்கள் 2 பேரை காவலாளி சுந்தர் மற்றும் ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த நேரத்தில் கோவில் மதில் சுவர் மீது நின்று கொண்டிருந்த மற்றொரு சிறுவன் வெளியே குதித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து குத்தாலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோவில் பணியாளர்கள் பிடித்து வைத்திருந்த 15 மற்றும் 16 வயது உடைய 2 சிறுவர்களை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com