கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேலும் 2 பேர் கைது

வீட்டில் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் பிரதி எடுத்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேலும் 2 பேர் கைது
Published on

கோவை

வீட்டில் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் பிரதி எடுத்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ள நோட்டுகள்

கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கோவை கரும்புக்கடை சாரமேடு வள்ளல்நகரை சேர்ந்த அஸ்ரப் அலி என்ற சேட்டு (வயது 29), உக்கடம் அல்-அமீன் காலனியை சேர்ந்த செய்யது சுல்தான் (32) ஆகிய 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்யது சுல்தான் வீட்டில் இருந்த ரூ.1 கோடியே 80 லட்சம் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் 2 பேரையும் கொச்சியில் உள்ள உதயம் பேரூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஜெராக்ஸ் எந்திரம்

செய்யது சுல்தானுக்கு வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர், கள்ள நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட் டார். அதன்படி அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜெராக்ஸ் எந்திரம் ஒன்றை வாங்கினார்.

அந்த எந்திரத்தில் ஒரிஜினல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து கள்ளநோட்டுகளாக பிரதி எடுத்து ள்ளார். அந்த நோட்டுகளை கோவை மற்றும் கேரளாவில் புழக்கத்தில் விட சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்.

புழக்கத்தில் விட்டார்

இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் போலீசார் மற்றும் அதிகாரிகள் தேர்தல் பணியில் இருப்பதை பயன்படுத்தி கள்ளநோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டுவிடலாம் என்று கருதினார்.

அதன்படி அவர், தனது நண்பர்கள் மூலம் கோவை மற்றும் கேரளாவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டார். இதில், கரும்புக்கடையை சேர்ந்த முகமதுரிசாத் (30), போத்தனூர் வசந்தம் நகரை சேர்ந்த அசாருதீன் என்ற ஆசித் (28) உள்பட 3 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் 2 பேர் கைது

இதையடுத்து போலீசார் மீண்டும் கோவை வந்து முகமது ரிசாத் மற்றும் அசாருதீன் ஆகிய 2 பேரையும் கைது செய்து கேரளாவுக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

அதுபோன்று கைதான 4 பேரிடமும் எந்தெந்த பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com