கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள அரும்பாக்கம் பகுதியில் அதிகாரி லதா தலைமையில் நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
Published on

அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். சோதனையின் போது அந்த பஸ்சில் 3 பைகளில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 12 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழகக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்திய சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த

லோகேஷ் (வயது 23) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com