

குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் அடையார் ஆற்றங்கரையோரம் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மண் கடத்தப்படுவதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது இரவு நேரத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரிகளில் மண்ணை திருட்டுத்தனமாக கடத்தப்படுவது தெரியவந்ததது.
இதனையடுத்து, குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணல் கடத்தியதாக குன்றத்தூர் நத்தம் பகுதியை சேர்ந்த எழில்வாணன் (வயது 36), சிக்கராயபுரம் சேர்ந்த கண்ணன் (35), ஆகிய 2 பேரை கைது செய்தனர். லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.