நாடாளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து உத்தவ் தாக்கரே கிண்டல்

நாடாளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்த்தில் தேர்தல் நடத்துவது குறித்து உத்தவ் தாக்கரே கிண்டலாக பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து உத்தவ் தாக்கரே கிண்டல்
Published on

மும்பை,

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவிற்கு, கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மக்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக மோடி அரசு உறுதி அளித்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்துவதற்கு மட்டும் ரூ.4 ஆயிரம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் உறுதியளித்தபடி மக்களுக்கு பணம் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசு விளம்பரங்களுக்கு செலவு செய்து வருகிறது. மக்களின் வரி பணத்தை வீணடிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதை மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நாட்டில் வளர்ச்சியின் விகிதம் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள் அப்படியானால் மக்களின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை? எதனால் பால் விவசாயிகள் கொள்முதல் விலையை அதிகரிக்குமாறு கூறி போராட்டம் நடத்தினர்? குஜராத்தை சேர்ந்த விவசாயிகள் ஏன் தங்களை தற்கொலை செய்ய அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்துவது குறித்த கருத்து தெரிவித்த அவர், "ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் யோசனை நல்லது, தேர்தலால் மக்களை முட்டாளாக்க முடியும், எனவே ஒரே நாளில் எல்லா தேர்தல்களையும் நடத்துவதன் மூலம், முழு நாடும் ஒரே நாளில் முட்டாளாக்கப்படும்" என்றார்.

இதேபோல் பிரதமர், முதல்-மந்திரிகள், மந்திரிகள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொந்த கட்சிக்காக பிரசாரம் செய்வது குற்றமாகும். அப்படி நீங்கள் பிரசாரம் செய்வதென்றால் யார் அழைத்தாலும் சென்று அவர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். உங்கள் கட்சியுடன் பிரசாரத்தை சுருக்கிக்கொள்ள கூடாது என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com