உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் தினமும்,காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம்

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் தினமும்,காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம்
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் தினமும்,காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம்
Published on

உடுமலை,

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் தினமும்,காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.எனவே அந்த நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் கூட்டம்

கொரோனா பரவல் தொற்று குறைந்ததைத்தொடர்ந்து உடுமலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பொதுமக்கள் கிராமங்களில் இருந்து உடுமலை நகருக்கு வந்து செல்வதும் அதிகரித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இதைத்தொடர்ந்து உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் கூட்டம் பஸ்சுக்காக அலைமோதுகிறது. முன்பு தனியார் பள்ளி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

மாணவ-மாணவிகள்

தற்போது பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை முழு அளவிற்கு இல்லாததால் ஓரிரு தனியார் பள்ளிகளைத்தவிர மற்ற தனியார் பள்ளி பஸ்கள் இயக்கப்படுவதில்லை.

அதன் காரணமாக மத்திய பஸ் நிலையத்தில் காலை நேரத்தில் மிக அதிக அளவில் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கூட்டம் காணப்படுகிறது.அதேபோன்று நேற்று காலையிலும் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பஸ் ஏறினர். அதேநேரம் பஸ்கள் 2 புறமும் நிறுத்தப்பட்டிருந்ததால் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே புறப்பட்டு செல்லும் பஸ்கள், பயணிகளின் கூட்ட நெரிசலுக்கிடையே சிரமப்பட்டு சென்றன.

அதனால் காலைமற்றும் மாலை நேரங்களில் மத்திய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நிற்கும் இடங்களை ஒழுங்கு படுத்தவும், பயணிகள் நெரிசல் இல்லாமல் பஸ் ஏறவும் அதிகாரிகள் இரண்டு நேரமும் கூடுதல் பஸ்களை இயக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com