உடுமலை நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என்று வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

உடுமலை நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என்று வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
உடுமலை நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என்று வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
Published on

உடுமலை

உடுமலை நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா ? என்று வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சிலர், பாதிப்பு அதிகமான நிலையிலேயே மருத்துவ மனைக்கு வருவதாக கூறப்படுகிறது.

சளி, காய்ச்சல் என்று கருதி மருத்துவ மனைக்கு செல்லாமல் காலம் கடந்து செல்கின்றனர். அவ்வாறு காலம் கடந்து மருத்துவ மனைக்கு செல்கிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டால், அதில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவருகிறது.

கணக்கெடுப்பு பணி

இதைத்தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று வீட்டு முகவரி, குடியிருப்பவர்களின் பெயர்கள், செல்போன் எண், எங்கு என்ன வேலை செய்கிறார்கள், காய்ச்சல், இருமல், தும்மல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய், சிறுநீரக பிரச்சினை, புற்றுநோய் உள்ளதா உள்ளிட்ட விவரங்களை சேகரித்து கணக்கெடுப்புநடத்தும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி உடுமலை நகராட்சி பகுதியில், ஆணையாளர் தே.கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில்நகர்நல அலுவலர் டாக்டர் கே.கவுரி சரவணன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், எம்.மாரியப்பன், எஸ்.சீனிவாசன், எஸ்.ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

வெப்பம் பரிசோதனை

இந்த கணக்கெடுப்பு பணியின்போது, வீட்டில் உள்ளவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்துகண்டறியப்படுகிறது. உடுமலை நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. மொத்தம் 17 ஆயிரத்து 526 வீடுகள் உள்ளன.இந்த வீடுகளில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும்.இந்த பணிகளில் நகராட்சி தூய்மை இந்தியா பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் 5குழுக்களாக சென்று இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com