உடுமலை சங்கர் கொலை வழக்கு: விசாரணை 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

உடுமலை சங்கர் கொலை வழக்கின் விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
உடுமலை சங்கர் கொலை வழக்கு: விசாரணை 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 22). என்ஜினீயரிங் மாணவரான இவர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி உடுமலையில் சங்கரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேரை உடுமலை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி ஆகியோர் சார்பில் கடந்த 2 நாட்களாக வக்கீல் ஆஜராகி வாதாடினார். வக்கீலின் வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com