தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாநாடு

சாதி ஆணவ படுகொலை எதிர்ப்பு என்கிற தலைப்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 2-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் உள்ள லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்தது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாநாடு
Published on

பெரம்பலூர்,

சாதி ஆணவ படுகொலை எதிர்ப்பு என்கிற தலைப்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 2-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் உள்ள லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்தது. மாநாட்டிற்கு அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். மக்களுக்கான மருத்துவர் கழகத்தின் மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன் தொடக்கவுரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கருணாநிதி மாநாட்டு அறிக்கையை வாசித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆறுமுகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் தாகீர் பாஷா, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரிஆனந்தன், தொழிலாளர் கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் வி.களத்தூரில் இரு மதத்தினருக்கிடையே நிலவும் பிரச்சினைக்கு சமூக நல்லிணக்கத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆதிதிராவிட மாணவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலிப்பதை அரசு தடுக்க வேண்டும். ஆதிதிராவிட மக்களுக்கு பஞ்சமி நிலத்தினை மீட்டு கொடுக்கவும், இலவச வீடுகள் கட்டி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை செயலாளர் ஜெயசீலன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் கருத்தரங்கமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com