2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை

2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
Published on

கர்நாடகம் வருகிறார்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அவரை முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட மந்திரிகள் வரவேற்கிறார்கள். அதன் பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதிக்கு செல்கிறார்.

அங்கு அதிவிரைவு படை பிரிவை அமித்ஷா தொடங்கி வைக்கிறார். பின்னர் மீண்டும் பெங்களூரு வரும் அவர், விதான சவுதாவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்கும் அவர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாகல்கோட்டையில் உள்ள நிரானி குழும நிறுவனங்களின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

போலீஸ் பாதுகாப்பு

அதை முடித்துக் கொண்டு அவர் பெலகாவி மருத்துவ கல்லூரியில் நடைபெறும் உயர்தர பயிற்சி மைய தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு அவர் பெலகாவியில் மறைந்த ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார்.

அதன் பிறகு அவர் டெல்லி புறப்பட்டு செல்வார் என்று கூறப்படுகிறது. அமித்ஷா வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com