நடிகை கங்கனா ரணாவத்தை சந்தித்து மத்திய மந்திரி அத்வாலே ஆதரவு ‘மும்பையில் இருக்கும்போது பயப்பட வேண்டாம்’

மத்திய மந்திரிஅத்வாலேநேற்றுநடிகை கங்கனாரணாவத்தைநேரில் சந்தித்து தனதுஆதரவை தெரிவித்தார்.
நடிகை கங்கனா ரணாவத்தை சந்தித்து மத்திய மந்திரி அத்வாலே ஆதரவு ‘மும்பையில் இருக்கும்போது பயப்பட வேண்டாம்’
Published on

மும்பை,

மும்பையை பாகிஸ்தான்ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனக்கூறிய நடிகை கங்கனாரணாவத்துக்குஆளும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிவசேனா எதிர்ப்பை மீறி அவர் மும்பை வந்தார். அப்போதுஇந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ்அத்வாலேவேண்டுகோளை ஏற்று நடிகைகங்கனாவுக்குபாதுகாப்பு கொடுக்கஅக்கட்சிதொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

இந்தநிலையில் கார் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நடிகை கங்கனாவை நேற்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் கங்கனா வீட்டிலேயே நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயப்படவேண்டாம்...

மும்பையை பற்றியும், மும்பை நகரை பற்றியும் கங்கனா கூறிய கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் அவரது பங்களாவை இடித்த செயல் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் கட்டளையை ஏற்று செய்யப்பட்டு உள்ளது.நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் கங்கனா உண்மையை தான் கூறி உள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது சி.பி.ஐ. விசாரணை முடிவில் தெரியவரும்.

மும்பை அனைத்து மொழி, மதத்தினருக்கும் சொந்தமானது. மும்பையில் இருக்கும்போது பயப்பட வேண்டாம் என்றும், தனது கட்சி ஆதரவாக இருக்கும் என்றும் அவரிடம் தெரிவித்தேன்.

கங்கனாவுக்கு அரசியல் ஆர்வம் இல்லை. ஆனால் எங்களது கட்சியில் சேர விரும்பினால் 100 சதவீதம் வரவேற்போம். பா.ஜனதாவில் சேர்ந்தால் எனது வரவேற்பு 50 சதவீதமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com