

மும்பை,
மும்பை வெர்சோவா யாரிரோடு பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 2 சிறுமிகள் சோகமாக அமர்ந்து இருந்ததை டி.வி. நடிகை ஒருவர் கண்டார். அந்த சிறுமிகளிடம் நடிகை பேச்சு கொடுத்த போது, குஜராத்தை சேர்ந்த அந்த சிறுமிகள் இருவரையும் ஒரு கும்பல் போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை வெர்சோவா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமிகளை அமெரிக்காவுக்கு கடத்தி செல்ல இருந்த அமிர்கான் (வயது36), தாஜூதின் கான் (48), அப்ஷல் சேக் (38), ரிஸ்வான் சோட்டானி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.