பிரபல கானா பாடகரான கானா பாலா சுயேச்சையாக போட்டி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார் கானா பாலா.. அதிலும் சொந்த மண்ணில் போட்டியிட போவதால், புளியந்தோப்பில் அனைவரது எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
பிரபல கானா பாடகரான கானா பாலா சுயேச்சையாக போட்டி
Published on

சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள 72 வது வார்டில் பிரபல கானா பாடகரும், வக்கீலுமான கானா பாலா என்ற பாலமுருகன் சுயேச்சையாக போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நான் பிறந்து வளர்ந்த இந்த பகுதியில் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன். நான் ஏற்கனவே இதே பகுதியில் போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளேன். இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதாக கானா பாலா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com