

கொரடாச்சேரி,
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கொரடாச்சேரி வட்ட கிளை கூட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் வசந்தன், மாவட்ட பொருளாளர் சுந்தரலிங்கம் ஆகியோர் பசினா.
இதில் வட்டார செயலாளர் முரளி, வட்டார பொருளாளர் பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதிய ஓய்வூதிய திட்டம்
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வண்டும். ஊராட்சி செயலர்களை இளநிலை உதவியாளர் பணிக்கு இணையான பணியாக கருதப்படவேண்டும். மேலும் அதற்கான ஊதியம் மற்றும் சலுகைகளையும் வழங்க வேண்டும்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் முழு சுகாதாரத் திட்டம் ஆகியவற்றில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள நாகை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைய உடனடியாக சரி செய்ய வேண்டும்.
புதிய கட்டிடம்
பழுதடைந்துள்ள கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வறு தீமானங்கள் நிறவேற்றப்பட்டன.