சிவ்னேரி கோட்டை மண்ணின் ஆசீர்வாதத்தால் நான் முதல்-மந்திரி ஆனேன் உத்தவ் தாக்கரே பேச்சு

சிவ்னேரி கோட்டை மண்ணின் ஆசீர்வாதத்தால் தான் நான் முதல்-மந்திரி ஆனேன் என உத்தவ் தாக்கரே கூறினார்.
சிவ்னேரி கோட்டை மண்ணின் ஆசீர்வாதத்தால் நான் முதல்-மந்திரி ஆனேன் உத்தவ் தாக்கரே பேச்சு
Published on

மும்பை,

ராய்காட் மாவட்டம் போலாட்பூர் தாலுகாவில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் படை தளபதி தானாஜி மாலுசாரேவின் 350-வது ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாற்றின் பெரிய மனிதர்களின் வாழ்க்கையை பற்றி மக்கள் அறிந்து கொள்வது அவசியம். நான் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பிறந்த சிவ்னேரி கோட்டையின் மண்ணை அயோத்திக்கு எடுத்துச் சென்றேன். ஒரு வருடத்திற்குள் ராமர் கோவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கோட்டைகளை பராமரிக்க உதவி

அதிசயங்களை உருவாக்கும் சிவ்னேரி கோட்டை மண்ணின் ஆசீர்வாதத்தால் தான் நான் மராட்டியத்தின் முதல்-மந்திரி ஆனேன். பலர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். கோட்டைகளின் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. கோட்டைகளை பராமரிப்பதற்கு எனது அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com