உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் முழக்கப்போராட்டம்

உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப்போராட்டம் நடத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் முழக்கப்போராட்டம்
Published on

உடுமலை,

சுகாதார ஆய்வாளர் சு.மணிகண்டனுக்கு உடுமலை நகராட்சியிலேயே பணிபொறுப்புகள் வழங்க வேண்டும். அவருக்கு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். உடுமலை நகராட்சி குழாய் பொருத்துனர் எல்.செல்வக்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற்று நியமன ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி உடுமலை நகராட்சி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.

அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் சுவரில் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த சுவரொட்டி ஒட்டியதற்கு நகராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அர ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரை நகராட்சி நகரமைப்பு அலுவலர் (பொறுப்பு) தாக்கியதாக அரசு ஊழியர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் அப்போது உடுமலை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும் அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகள் மற்றும் இந்த சுகாதார ஆய்வாளர்,குழாய் பொருத்துனர் ஆகிய இருவரின் பணிகள் உத்தரவுகள் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடர் முழக்கப்போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உடுமலை வட்டக்கிளை தலைவர் ஜி.ராஜேந்திரபூபதி தலைமை தாங்கினார். மாநிலத்துணைத்தலைவர் ஞானத்தம்பி சிறப்புரையாற்றினார். மாவட்டத்தலைவர் ஆர்.பாஸ்கரன் செயலாளர் ஆ.அம்சராஜ், உடுமலை வட்டக்கிளை செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் டி.வைரமுத்து உள்பட பலர் பேசினர். தர்ணா போராட்டம் இரவு 8.30 மணிக்கு பிறகும் தொடர்ந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com