விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு
Published on

மணப்பாறை, மார்ச்.1-

மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.

வடமாடு மஞ்சுவிரட்டு

மணப்பாறையை அடுத்த பெஸ்டோ நகர் பகுதியில் ஆண்டுதோறும் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டும் நேற்று வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் ஒரு காளையை அடக்க 9 வீரர்கள் என களமிறக்கப்பட்டனர். இதே போல் ஒரு காளைக்கு 20 நிமிடம் களத்தில் விளையாடுவதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காளைகள் வடத்தில் கட்டப்பட்டது. இதையடுத்து வடத்தில் நின்ற காளையை அடக்க வீரர்கள் கடுமையான போராடினர். இருப்பினும் சில காளைகளை கடுமையாக போராடி அடக்கினர். பல காளைகளை வீரர்களை நெருங்கவிடாமல் ஆட்டம் காட்டி வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பரிசு வழங்கவில்லை

காளையும் வீரர்கள் அடக்கும் போதும், வீரர்களை காளைகள் விரட்டி அடிக்கும் போதும் களமே கரகோசத்தால் அதிர்ந்தது. வடமாட்டைப் பொறுத்தவரை வெற்றி பெறும் காளைக்கு அதன் உரிமையாளருக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பரிசுகள் வழங்கவில்லை. வடமாடு மஞ்சுவிரட்டை காண ஏராளமானேர் திரண்டு இருந்தனர். முன்னதாக ஒவ்வொரு காளையும் அவிழ்க்கும் போது அதற்கான மரியாதை ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில் அளிக்கப்பட்டு அதன் பின்னரே அவிழ்த்து விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com