திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலில் அபிராமி அம்மன் சிலையை பிரதி‌‌ஷ்டை செய்யக்கோரி வேல் யாத்திரை; இந்து மக்கள் கட்சியினர் 26 பேர் கைது

திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலில் அபிராமி அம்மன் சிலையை பிரதி‌‌ஷ்டை செய்யக்கோரி வேல் யாத்திரை சென்ற இந்து மக்கள் கட்சியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் வேல் யாத்திரை சென்றபோது எடுத்த படம்.
திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் வேல் யாத்திரை சென்றபோது எடுத்த படம்.
Published on

144 தடை உத்தரவு

திண்டுக்கல் மலைக்கோட்டை உச்சியில் சாமி சிலைகள் இல்லாத, அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினமும் கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் தயாராகினர். ஆனால், மலைக்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

மேலும் தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். அதை கண்டித்து திண்டுக்கல்லில் சாலை மறியல் மற்றும் நிர்வாகிகள் தீக்குளிப்பு முயற்சி சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்தன. இதனால் மலைக்கோட்டை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

வேல் யாத்திரை

இதற்கிடையே நேற்று பாரதிபுரத்தில் இருந்து பேகம்பூர் யானைதெப்பம் வரை வேல் யாத்திரை செல்வதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்தனர். அதன்படி இளைஞர் அணி மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, மாவட்ட பொதுச்செயலாளர் மாசானம் உள்ளிட்டோர் வேல் ஏந்தியபடி பாரதிபுரத்தில் இருந்து புறப்பட்டனர். அப்போது மலைக்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். மலைக்கோட்டை கோவிலில் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் உள்ளிட்ட சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். கந்தகோட்டை முருகன் கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக நிர்வாகிகள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com