வயலில் வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் படுகாயம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு நேற்று காலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வேன் ஒன்று புறப்பட்டது. அதில் டிரைவரையும் சேர்த்து 7 பேர் பயணம் செய்தனர்.
வயலில் வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் படுகாயம்
Published on

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மயிலாப்பூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 34) என்பவர் வேனை ஓட்டினார். ஒதப்பை கிராமத்தில் உள்ள வளைவான சாலையில் சென்றபோது, திடீரன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அருகில் உள்ள வயலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் வேன், அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஊத்துக்கோட்டை கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்த இளவரசன் (20), நெல்வாய் கிராமத்தை சேர்ந்த செங்கல்வராயன் (25), வெங்கடாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (55), மயிலாப்பூரை சேர்ந்த பாபு (44), கூலிபாளையம் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி (37), கட்சூர் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் (45) ஆகிய 2 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அனைவரும், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com