

நிலக்கோட்டை,
நிலக்கோட்டை வக்கீல் சங்கத் தலைவராக இருப்பவர் வணங்காமுடி. இவரை பாரதீய ஜனதா கட்சியின் தமிழக வக்கீல் அணி மாநில துணை தலைவராக கட்சியின் மாநில தலைவர் முருகன், வக்கீல் அணி தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்து சான்றிதழை வழங்கியுள்ளனர். இதுகுறித்து வணங்காமுடி கூறுகையில், பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, தமிழக பா.ஜனதா தலைவர், மாநில வக்கீல் அணி தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.