வானவில் : நிறம் மாறும் ஸ்வெட்டர்

இத்தாலிய பேஷன் நிறுவனமான ஸ்டோன் ஐ லேண்ட் புதிய வகையான ஸ்வெட்டர் ஒன்றை தயாரித்துள்ளது. உடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப நிறம் மாறுகிறது இந்த ஸ்வெட்டர்.
வானவில் : நிறம் மாறும் ஸ்வெட்டர்
Published on

இரண்டு லேயர்கள் கொண்ட இந்த ஸ்வெட்டர் உள்ளே தரமான கம்பளியால் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் தெர்மோகிரோனிக் எனப்படும் இழைகளால் நெய்யப்பட்டுள்ளது. இந்த இழைகள் தான் நிறம் மாற காரணமாக இருக்கின்றன. நமது உடல் சூடாக இருக்கும் போது இந்த ஸ்வெட்டர் சிறிது சிறிதாக நிறம்மாறி பின்னர் முழுவதும் வேறு வண்ணத்திற்கு மாறிவிடுகிறது. அதாவது மஞ்சள் வண்ண ஸ்வெட்டர் அணிந்திருந்தால் அது வெப்பம் பட்டவுடன் ஆரஞ்சு நிறமாக மாறுகிறது.

பார்ப்பதற்கு வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும் இந்த ஸ்வெட்டர் சிறிய எண்ணிக்கைகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. வரவேற்பை பொறுத்து பல மாடல்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com