வானவில் : சென்னையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்.யு.வி.

சொகுசு கார்களைத் தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முதல் முறையாக எஸ்.யு.வி. மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
வானவில் : சென்னையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்.யு.வி.
Published on

கடந்த வாரம் சென்னையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ.6.95 கோடி.

கோடீஸ்வரர்களுக்கான இந்த காரை சென்னையில் அறிமுகம் செய்து உரிய வாடிக்கையாளர்களைக் கவர திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். செவ்வக வடிவிலான ஹெட்லைட், மிகப் பிரமாண்டமான 22 அங்குல அலாய் சக்கரங்கள், மேற்கூரை ஸ்பாயிலர், நேர் செங்குத்தாக அமைந்துள்ள பின்புற விளக்குகள், இரட்டை எக்ஸாஸ்ட் பைப் ஆகியன இந்தக் காரின் கம்பீரத்தை மேலும் பறைசாற்றும்.

6.75 லிட்டர் ட்வின் டர்போ வி 12 என்ஜினைக் கொண்டது. இது 563 ஹெச்.பி. திறன் மற்றும் 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. சாலைப் பயணத்துக்கு மட்டுமின்றி சாகசப் பயணத்துக்கும் ஏற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com