வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு நெல் கோட்டையை ஊர்வலமாக கொண்டு வந்த விவசாயிகள்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு நெல் கோட்டையை ஊர்வலமாக விவசாயிகள் கொண்டு வந்தனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு நெல் கோட்டையை ஊர்வலமாக கொண்டு வந்த விவசாயிகள்
Published on

வேதாரண்யம்,

வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இ்ந்த கோவிலுக்கு சொந்தமாக 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் திருத்துறைப்பூண்டி அருகே குன்னலூர் கிராமத்தில் 200 ஏக்கர் கோவில் நிலம் உள்ளது. இந்த நிலங்களில் இருந்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் இங்கு விளையும் நெல்லை தைப்பூசம் அன்று நெல் கோட்டையாக கட்டி கொண்டு வந்து வேதாரண்யேஸ்வருக்கு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று தைப்பூசத்தையொட்டி விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து அதனை கோட்டையாக கட்டி வேதாரண்யம் கொண்டு வந்தனர்.

நெல்கோட்டை

பின்னர் வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோவிலில் நெல்கோட்டையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக விவசாயிகள் தங்களது தலையில் தூக்கி கொணடு ஊர்வலமாக வந்து வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஒப்படைத்தனர். பின்பு அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்களை வழங்கினர். நெல் கோட்டையில் கொண்டுவந்த நெல்லை அரிசியாக்கி சாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com