ஆரணியில் காய்கறி மார்க்கெட்

ஆரணி புதிய பஸ் நிலையத்தில் மொத்த காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இதனால் காலை 10 மணி வரை உள்ளே லாரிகள் நிற்பதால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வராமல் இருந்தன.
ஆரணியில் காய்கறி மார்க்கெட்
Published on

ஆரணி,

காய்கறி மொத்த வியாபாரிகள் ஒன்றுகூடி கார்த்திகேயன் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு மொத்த காய்கறி மார்க்கெட்டை மாற்றியமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மொத்த காய்கறி மார்க்கெட் தொடக்க விழா சங்கத்தலைவர் ஏ.எஸ்.கே.சுபானி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சாதிக்பாஷா, வணிகர் பேரமைப்பு நகர தலைவர் நாராயணன், செயலாளர் செல்வம், பொருளாளர் செங்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல் விற்பனையை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசுகையில், ஆரணி நகர மக்களின் நலனுக்காகவும், வியாபார அபிவிருத்தி செய்வதற்காகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் இருக்கவேண்டும் என்பதற்காக விசாலமான இடத்தில் லாரிகள் வந்து செல்வதற்கும், கிராமப்புற வியாபாரிகள், ஆரணி காய்கறி வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மொத்த காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் இடத்தின் உரிமையாளர் வி.பி.உதயசூரியன், செஞ்சி வி.ஏழுமலை எம்.பி, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com